நன்றி ! மீண்டும் பார்க்க!....

     மாசு என்றால் என்ன?
               மாசு என்பது சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை சுற்றுப்புறத்தில் வெளியிடுவதாகும். பொதுவாக மனிதனின் செயல்பாடுகளால் சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்கப்படும் பொருட்களை வெளியிடுவதே மாசுபடுதல் என்கிறோம். மனிதனின் நடவடிக்கைகளால் சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை வெளியிடுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளையே மாசுபடுதல் என்று அறியப்படுகிறது.
     மாசுகளின் ஆதாரம்
              இராசயன தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், அணுக்கரு உலைக் கழிவுகள், கழிவுகள் குவிக்கப்படுதல், எரிப்பான்கள், பிவிசி தொழிற்சாலைகள், கார் உற்பத்தித் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், பெரிய வணிகரீதியாக செயல்படும் கால்நடை பண்ணைகளிலிலிருந்து உருவாகும் கால்நடை கழிவுகள்.
              விபத்துகள் ஏற்படும் போது அணுக்கரு உலைகளும், எண்ணெய் கொப்பரைகளும் அதிக அளவிலான மாசினை ஏற்படுத்துகின்றன.
             
முக்கிய மாசுப் பொருட்களாவன, குளோரினேட்டட் ஹைட்ரோகார்பன்கள், உலோகங்களான லெட் (பெயிண்ட் -ல் காணப்படும் பொருள்), காட்மியம் (பேட்டரிகளிலுள்ள காட்மியம்), குரோமியம், துத்தநாகம், ஆர்சனிக் மற்றும் பென்சீன்.
         
Copywrite @2016 ENVIS Centre !  All rights reserved  This site optimized for 1250 x 2000 Screen resolution        தனியுரிமை | நிபந்தனைகள்
மாசுபடுதல்
          இயற்கை பேரிடர்களின் போது மாசுபடுதல் அதிக அளவிலான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக ஹரிக்கேன் எனப்படும் புயல் வெள்ளத்தின் போது சாக்கடை கழிவு நீர் கலந்து தண்ணீர் மாசுபாடு, மூழ்கிய படகுகளில் இருந்து வெளியேறும் பெட்ரோலியப் பொருட்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்களிலிருந்து வெளியேறும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் கடற்கரையோரம் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலில் இருந்து வெளியேற்றப்படும் பெட்ரோலியம் சார்ந்த கழிவுப்பொருட்கள் போன்றவைகளால் மாசுபாடு பெரும்பாலும் ஏற்படுகிறது.


HIT COUNT